கவிமாலை உங்களை அன்புடன் வரவேற்கிறது.
சிங்கப்பூரில் கவிஞர்கள் ஒருங்கிணைந்து கவிதையைச் சிந்திக்க, கவிதையால் சிந்திக்க, உருவாக்கிய ஒரு இலக்கிய அமைப்பு கவிமாலை. கவிதையால் இணைந்து கவிதையை வளர்ப்பதே கவிமாலையின் நோக்கம். கவிமாலை கவிஞர்களால் ஆன, கவிதைக்காக கவிஞர்களே நடத்தும் இயக்கம்.
இந்த அமைப்பை இதயமாக இருந்து இயங்குவதும் இயக்குவதும் கவிஞர்களே.
கடற்கரைச் சாலைக் கவிமாலை என்று சிங்கப்பூரில் 2000-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கவிமாலை ஓர் இயக்கம், ஒரு அமைப்பு, ஒரு குடும்பம்.
200 மாதங்கள் கடந்து, வலுவான பிணைப்போடு வளர்ந்து, இன்று கவிமாலை சிங்கப்பூர் என்ற பெயரில் சிங்கப்பூரில் முறையாகப் பதிவு செய்யப்பட்ட அமைப்புகளுள் ஒன்று.
நேற்றைய இலக்கியம் படிப்போம், புதிய சிந்தனையால் நாளைய இலக்கியம் படைப்போம்.