சொல்லே அதிகம் சுடும்

0
640

சொல்லே அதிகம் சுடும்

முதல் வகுப்புப் பயணத்தில்

இறக்கிவிட்ட ஆத்திரத்தைவிடவும்

அண்ணலின் இதயம் தைத்தது

ஆங்கிலேயன் நிறவெறியால் உதிர்த்தவை தான்

தேங்காய்ச் சிரட்டையில்

தண்ணீர் தவிக்கக் கேட்கும்

காத்தாயிப்பாட்டியின் பேத்தி தெரியாமல்

தொட்ட கண்ணாடிக்குவளைக்காக 

வீசிய சாதிய சுட்டல்களில் தான்..

மேல்மருத்துவத்தில் மேடேற

முட்டிமோதி வேற்றூரில் தனித்திருந்த

மருத்துவமாமணிகளின் மனத்திடத்தை வேரறுத்துக் கொன்ற 

பாதகரின் சீண்டல் பேச்சுகளில் தான்..

பல்லாயிரம் குத்தூசியிட்டுக் கிழித்திடும்

வலியினும் ஆறா ரணமான

சொற்களே அதிகம் சுடும்..!

– ச. மோகனப்பிரியா