எதிர்வரும் ஜனவரி 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை, 6.30 மணிக்கு கவிமாலைக் கவிஞர் துரை.முத்துகிருட்டினன் அவர்களின் இருநூல்கள் அறிமுக விழா நடைபெறும். கவிமாலையின் 95 மற்றும் 96 ஆவது வெளியீடாக வரவிருக்கும்
இந்நூல்களை பொற்கிழிக்கவிஞர் மதுரை சொ.சொ.மீ.சுந்தரம் ஐயா அவர்கள் வெளியிட்டு அறிமுக உரையாற்ற இருக்கிறார்கள் .
இந்நிகழ்விற்கு கவிமாலை தங்களையும், தங்கள் நண்பர்களையும் குடும்பத்தாரையும் அன்புடன் வரவேற்கின்றது. அனுமதி இலவசம்.
தேதி : 08-01-2017
நேரம் : மாலை 6:30 – 8:00 மணி வரை
இடம் : ஆனந்த பவன் உணவகம் மேல்தளம், சையத் ஆல்வி சாலை, முஸ்தபா சென்டருக்கு எதிரில்