கவிமாலை 202 | டிசம்பர் 2016

0
474

டிசம்பர் மாதக் கவிமாலை கிறிஸ்துமஸ் பண்டிகை தினமாகிய 25.12.2016 – ஞாயிறன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை சிங்கப்பூரின் வரலாற்றுப் புகழ்பெற்ற நினைவிடங்களில் ஒன்றாகிய, ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட தஞ்சோங் பகார் பழைய தொடர்வண்டி நிலையத்தில் நடக்க இருக்கிறது. (2011 வரை கோலாலம்பூருக்குச் செல்லும் தொடர்வண்டி முனையமாகச் செயல்பட்டு வந்தது ). இன்னும் சில ஆண்டுகளில் அந்த இடம் மறு சீரமைப்புக்கு உள்ளாகி புதிய பெருவிரைவு இரயில் தடமாக உருமாற இருக்கும் அந்நிலையம் பொதுமக்களின் பார்வைக்கு 25.12.2016  அன்று திறந்துவிடப்படுகிறது.
அவ்வரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அந்த வளாகத்திற்குள் இம்மாதத்தின் சிறப்புக் கவிமாலை நடைபெறவிருக்கிறது.   தந்தை பெரியார் அவர்கள் இருமுறை சிங்கை வந்த போதும், இந்த இரயில் நிலையத்தில் வந்திறங்கியதும், அப்போதுள்ள தமிழர்கள் அவருக்கு வழங்கிய வரவேற்பும், வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அதை நினைவு கூறும் வகையில் இந்த கவிமாலை நிகழ்வில், பெரியார் சமூக சேவை மன்றமும் தன்னை இணைத்துக் கொள்கிறது. 
வழக்கமான கவிமாலை அங்கங்கள், பரிசுகள் உண்டு. ‘பொங்கலோ பொங்கல்’ தலைப்பில் போட்டிக்கு வந்த டிசம்பர் மாத இசைக் கவிதைகளின் பரிசு அறிவிப்பும், கருத்துரையும் நடைபெறும். ஜனவரி மாதக் கவிதைப்போட்டித் தலைப்பாகிய ‘காற்றிலே கலந்ததுஎனும் தலைப்பில் கவிதையுடன் கவிஞர்கள் வரவும்.
கலந்துகொள்ள விரும்பும் கவிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் (சைவம் / அசைவம் என்பதைக் குறிப்பிட்டு) தங்கள் பெயரை முன்கூட்டிப் பதிவு செய்துகொண்டால் உணவுப் பொட்டலம் தயார் செய்ய உதவியாக இருக்கும். பதிவு செய்தல் : மா. அன்பழகன் 90053043 –  (அ)  ma.anbalagan@gmail.com வழி தெரிவிக்கவும்.
அனைவரும் வரலாம். அனுமதி இலவசம்.
தங்கள் செலவில் / பொறுப்பில் பேருந்து (அ) எம் ஆர் டி மூலம் பகல் ஒரு மணிக்குள் நிலையத்திற்கு வந்து சேரவேண்டும். 
உட்ராம் பார்க் (அ) தஞ்சோங் பகார் எம் ஆர் டியிலிருந்து 15 நிமிடங்களில் நடந்தும் வரலாம்.
பேருந்து மூலமும் வரலாம். (அ) ஹார்பர் பிராண்ட் எம் ஆர் டி நிலையத்திலிருந்து பேருந்தில் வரலாம்.  பேருந்து தட எண்கள் : 10, 30, 57, 75, 80, 97, 100,    131, 145. இறங்க வேண்டிய இடம், கெப்பல் சாலை ‘பழைய இரயில் நிலையம்’.
சொந்த வாகனங்களில் வருபவர்களுக்குப் பொது நிறுத்தும் இடவசதி அருகில் உள்ளது.