கவிமாலை 201 – நவம்பர் 2016

0
618

director_mahendranஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் கவிமாலை சிங்கப்பூர், கவிஞர்கள் சந்திப்பை நடத்தி வருகிறது

201-ஆவது மாதச் சந்திப்பான, இந்த நவம்பர் மாதக் கவிமாலைச் சந்திப்பு வரும் 27. 11. 2016 ஞாயிறு அன்று மாலை சரியாக 7 மணிக்கு ஜாலான் புசார் சமூக மன்றத்தின் பின்புறமுள்ள தற்காலிக விலாசமான கிங்க் ஜார்ஜ் அவன்யூ புளோக் 804-இன் மூன்றாவது தளத்தில் உள்ள (சிங்கப்பூர்-200804)  அரங்கத்தில் நடைபெறும்

வருகை தரும் கவிஞர்கள்மனதில் நின்ற கவிதைகள்என்ற அங்கத்திற்கு 8 வரிகளுக்குள் உள்ள ஒரு கவிதையை பார்க்காமல் மனதிலிருந்து சொல்லத் தயார் செய்து வர வேண்டுகிறோம். அதைத் தொடர்ந்து வடித்ததில், படித்ததில் பிடித்தது அங்கம் நடைபெறும்.

நவம்பர் மாதக் கவிதைப் போட்டியில் வெற்றிபெற்ற கவிதைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி போன்ற படங்களை இயக்கிய புகழ் வாய்ந்த தமிழ்த் திரை இயக்குநர் திரு ஜே.மகேந்திரன் அவர்கள் மாலை 7.50க்கு திரையில் இலக்கியம் என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுவார்.

இயக்குநர் திரு ஜே.மகேந்திரன் அவர்கள், 200 மாத நிகழ்வுகளை வெறிகரமாக நடத்தியிருக்கும் கவிமாலையின் 16 ஆண்டுப் பயணத்தில் நன்றிக்கு உரியவர்களுக்கு சிறப்பு நினைவுப் பரிசை வழங்குவார்.

கவிஞர்கள் டிசம்பர் மாதத்திற்கான கவிதைப் போட்டிக்காகக் கொடுக்கப்பட்டபொங்கலோ பொங்கல்என்ற தலைப்பில் இசைப் பாடலை இயற்றி வருமாறு கேட்டுக்கொள்கிறோம். வழக்கம் போல 8 கவிதைகள் டிசம்பர் மாதப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும். அந்த 8 கவிதைகளில் இசைப் பாடலுக்கு உகந்த 3 பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் 2017 ஜனவரி 15-ஆம் நாள் புக்கிட் பஞ்சாங்கில் நடைபெறும் பொங்கல் விழாவில் மேடையில் பாடகர்களால் பாடப்படும்.

தமிழ்க் கவிஞர்கள், ஆதரவாளர்கள், இதனையே அழைப்பாகக் கருதி அனைவரும் வருகை தந்து பயனடைய அன்புடன் வேண்டுகிறோம்.

தகவலுக்கு : 9853 6465 / 85960076